இன்று 43வது பிறந்தநாள் : மு.க.ஸ்டாலினிடம் உதயநிதி வாழ்த்து பெற்றார்... தமிழகம் முழுவதும் நல உதவிகள் வழங்கப்பட்டது

சென்னை, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தனது பிறந்தநாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தனது 43வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். இதை முன்னிட்டு தனது தந்தையும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தாயார் துர்கா ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது, உச்சி முகர்ந்து அவருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து அவர், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து, கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்துக்கு சென்று, கலைஞர் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்த அவர், தொண்டர்களிடம் ஆசி பெற்றார். தொடர்ந்து அவர், தனது இல்லத்தில் தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றார்.உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினர் பல்வேறு நல உதவிகளை வழங்கினார். மாணவ-மாணவிகள் மற்றும் மழை, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை திமுகவினர் வழங்கினர்.

Related Stories:

>