தெற்கு வங்கக் கடலில் நவ. 29-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; தென் தமிழகம் நோக்கி நகரும்; வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தெற்கு வங்கக் கடலில் நவ. 29-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் நாட்களில் தீவிரமடைந்து மேற்கு நோக்கி நகர்ந்து தென் தமிழகம் நோக்கி வரும் எனவும் தெரிவித்துள்ளது. சென்னை: நிவர் புயல் கரையை கடந்து சென்ற சுவடு கூட இன்னும் மறையாத நிலையில் வங்க கடலில் அடுத்ததாக புயல் உருவாகிறது. வரும் 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. வங்கடலில் அண்மையில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை 2.30 மணிக்கு புதுவை மரக்காணம் இடையே கரையை கடந்தது.

இந்த புயல் கரையை கடக்கும் போது கடலூர் புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. 143 கிமீ வேகத்தில் காற்று வீசியது. நிவர் புயல் கரையை கடந்து சென்ற சுவடு கூட இன்னும் மறையாத நிலையில் வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது என்றும், நவம்பர் 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.  நவம்பர் 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்கக்கடலில் உருவாக வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் நாட்களில் தீவிரமடைந்து மேற்கு நோக்கி நகர்ந்து தென் தமிழகம் நோக்கி வரும் எனவும் தெரிவித்துள்ளது.  தெற்கு வங்க கடலில் புயல் உருவானாலும் இந்த புயல் எந்த திசையை நோக்கி நகரும் என்பதை பொறுத்து தமிழகத்தில் தீவிர மழை பெய்யுமா அல்லது ஆந்திரா, ஒடிசாவில் அதிக மழை பெய்யுமா என்பது தெரியும். நிவர் புயல் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழகத்தில் கரையை கடந்து திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள் வழியாக கடந்து செல்லும் நிலையில் அந்த பகுதிகளில் எல்லாம் மழை வெளுத்து வருகிறது. இந்த புயலின் தாக்கம் குறைய இன்னும் இரண்டு நாள் ஆகும். அதற்கு மறுநாளே புயல் உருவாகுவதால் பரபரப்பு நிலவுகிறது.

Related Stories: