தமிழகத்தை தாக்கிய முக்கிய புயல்கள்

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வட கிழக்கு பருவமழை காலத்தில் மழை பெய்வது வழக்கமான ஒன்றுதான். இந்த காலத்தில் தமிழகத்தை பல்வேறு பெரும் புயல்கள் தாக்கி பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளன. அவை நீங்காத வடுக்களாக இன்றும் இருக்கின்றன.

* 2010ம் ஆண்டு ‘ஜல்’ என்று பெயர் நவம்பர் 6ம் தேதி மணிக்கு 111 கிமீ வேகத்தில் சென்னையை கடந்து சென்றது. இதில் சுமார் 60 பேர் இறந்தனர்.

* 2011ம் ஆண்டு உருவான ‘தானே’ புயல். இது கடலூரை ஒட்டிய பகுதியில் கரையைக் கடந்தது. பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசமானது.

* 2012ம் ஆண்டு உருவானது ‘நீலம்’ புயல். இதனால் 20 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டது.

* 2013ம் ஆண்டு உருவானது ‘மடி’ புயல். பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசமானது.  

* 2016ம் ஆண்டு உருவானது ரோனு, கியாந்த், நடா புயல்கள். இவற்றால் பாதிப்பு இல்லை.

* 2016ம் ஆண்டு டிசம்பரில் ‘வார்தா’ அதி தீவிர புயலாக மாறி, 12ம் தேதி சென்னையில் கரையைக் கடந்தது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கில் மரங்கள் வீழ்ந்தன. 15க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். சேதமதிப்பு 1000 கோடி. இது சென்னையை  ஸ்தம்பிக்க வைத்தது.

* 2017ம் ஆண்டு உருவானது ‘ஒக்கி’ புயல். இது நவம்பர் 30ம் தேதி 185 கிமீ வேகத்தில் கரையைக் கடந்தபோது கன்னியாகுமரியை புரட்டிப் போட்டது. பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்தது. 300க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். 650க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. இந்த புயலால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டது.

* 2018ம் ஆண்டு உருவான ‘கஜா’ புயலின் வடு இன்னும் மாறவில்லை. 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. இதில் கடலூர் மாவட்டத்தில் இயற்கை வளங்கள், பல ஆயிரம் தென்னை மரங்கள், பயிர்கள் சேதம் அடைந்தன. 60 பேர் உயிரிழந்தனர். கோழிகள், பறவைகள், உள்ளிட்டவை முதல் முறையாக இந்த புயலில்தான் இறந்தது. 86 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்தன.  

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவானது ஃபனி புயல்.

Related Stories: