நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை; 2 நாட்களுக்குள் காப்பீடு செய்ய வேண்டும்..! விவசாயிகளுக்கு வேளாண்த்துறை செயலர் அறிவுறுத்தல்

சென்னை: விவசாயிகள் தங்களுடைய பயிர்களை 2 நாட்களுக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என வேளாண்த்துறை செயலர் தெரிவித்தார். நிவர் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக முன்காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் பயிர்களின் மகசூலை இயற்கை பேரிடர்களில் இருந்து காக்க பயிர் காப்பீடு செய்வது மிகமிக அவசியமாகும். தற்போது, வேளாண்மை பயிர்களான சம்பா நெற்பயிர், சிறுதானிய பயிர்கள், பயறுவகை பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களான வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளை, சிவப்பு மிளகாய், கேரட், கத்தரி, வெண்டை, தக்காளி, பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி மற்றும் முட்டைகோஸ் பயிர்களுக்கான பயிர் காப்பீடு நடைபெற்று வருகிறது.

வரும் நவம்பர் 24, 25, 26 ஆகிய தேதிகளில் கன மழை முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்வரும் 25 ம் தேதி நிவர் புயல் காரைக்கால் அருகே கரையை கடக்கிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து விவசாயிகளும் தங்களுடைய பயிர்களை அருகிலுள்ள பொது சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது வர்த்தக வங்கிகளிலோ உரிய காப்பீடு கட்டணம் செலுத்தி காப்பீடு செய்து இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட இருக்கும் நிதி இழப்பீடுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். 2 நாட்களுக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: