சென்னையை நெருங்கும் புயல் சின்னம்; நாளை மறுதினம் கரையைக் கடக்கிறது நிவர் புயல்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: வங்கக் கடலில் தீவிர புயலாக நாளை மறுநாள் கரையை கடக்கிறது நிவர் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்; நேற்று தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி. இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக மாறும். 25-ம் தேதி பிற்பகலில் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புயல் கரையை கடக்கும்.

சென்னையில் இருந்து 591 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 550 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. புயலின் மையப்பகுதி மட்டுமல்லாமல் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடக்கும் இடங்களிலும் பாதிப்பு இருக்கும். மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. புயல் காரணமாக கடல் அலைகள் இயல்பைவிட 2 மீட்டர் வரை உயரக்கூடும். வங்கக் கடலில் தீவிர புயலாக நாளை மறுநாள் கரையை கடக்கிறது நிவர். நாளை மறுநாள் கரையை கடக்கும் போது அணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நிவர் புயல் காரணமாக நாளை, நாளை மறுநாள் காவிரி டெல்டா, வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். 24-ம் தேதி கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். கடலூர், செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 25-ம் தேதி பலத்த மழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: