புயலால் ஏற்படும் சேதங்களை எப்படி குறைப்பது?: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.!!!

சென்னை: தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் கடந்த வாரம் உருவான காற்று சுழற்சி படிப்படியாக வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தமாக மாறியது. அந்த காற்றழுத்தம் மேலும் வலுப்பெறத் தொடங்கி காற்றழுத்த தாழ்வுப்  பகுதி  படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறத் தொடங்கியுள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று புயலாக மாறி 25ம் தேதி சென்னைக்கும் காரைக்காலுக்கும் இடையில் கரையை கடக்கும் என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக உருவாகும். இந்த  புயலுக்கு ‘நிவர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தற்போது, புதுச்சேரிக்கு 550 கி.மீ, சென்னைக்கு 590 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாகவும், மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. கரையை கடக்கும் போது காற்று 120 கி.மீட்டர் வேகத்தில் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், புயலால் ஏற்படும் சேதங்களை குறைப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: