மாவட்டத்தில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் இன்றே பயிர்க்காப்பீடு செய்ய வேண்டுகோள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கோல்டி பிரேமாவதி வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்கள் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் விவசாயிகள் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சம்பா 2020-21 பருவத்தில் கடைசி நாள் நவ.30ம் தேதிவரை காத்திருக்காமல் நவ.23ம் தேதிக்குள் பொது சேவை மையம், தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகளை அணுகி ஏக்கருக்கு ₹451 செலுத்தி காப்பீடு செய்யலாம். பயிர் காப்பீடு செய்ய தேவையான ஆவணங்கள், ஆதார் அட்டை நகல், கணிப்பொறி சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர் சாகுபடி அடங்கல் அல்லது விதைப்புச்சான்று, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல், பயிர்க் காப்பீடு செய்வதற்கான முன்மொழிவு விண்ணப்பத்துடன் கூடிய பதிவு விண்ணப்பம்.

காப்பீடு செய்த உடன் விவசாயிகள் தங்களது பயிர் சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர். சாகுபடி பரப்பு. வங்கி கணக்கு எண் விவரங்களை உடனடியாக சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனவே. எதிர்பாராத இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்பை தவிர்த்திட உடனடியாக பயிர் காப்பீடு செய்யுமாறு காஞ்சிபுரம். வேளாண்மை இணை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: