மத்திய அரசு குழப்பத்தில் தேர்வை நடத்துகிறது: ரா.சுதாகர், திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர்

முதுநிலை படிப்புகளுக்கு தற்போது தனியாக தேர்வுகளை கொண்டுவந்துள்ளார்கள். முன்னதாக எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மருத்துவ கல்லூரிகளுக்கு தனித்தனியாக விண்ணப்பிப்போம். இப்போது மத்திய அரசு குறிப்பிட்ட கல்லூரிகளுக்கு மட்டும் தனியாக ஒரு தேர்வை மட்டும் நடத்துகிறார்கள். நீட்டில் விண்ணப்பிக்கும் அனைவருமே முதுநிலை மருத்துவப் படிப்பிற்கும் விண்ணப்பிப்பார்கள். தற்போது அரசு கொண்டுவந்திருக்கும் இந்த தேர்வு ஒரு மாறுபாட்டை கொடுத்துவிடுமா என்றால் கண்டிப்பாக ஒரு பெரிய மாறுபாட்டை கொடுத்துவிடாது. குறிப்பாக ஒரு மாணவன் இளநிலை படிப்பிற்கு நீட் முடித்துவிட்டு முதுநிலை படிப்பிற்கு மேற்கொண்டு விண்ணப்பிக்கும் போது நன்றாக பயிற்சி செய்து தான் விண்ணப்பிப்பான்.

எனவே, இந்த தனிப்பட்ட தேர்வு என்பது தேவையில்லை. இந்தியா முழுவதும் நீட் போன்ற ஒரு பொதுத்தேர்வு இருக்கும் போது இவர்கள் தனியாக முதுநிலை படிப்பிற்கும் அதுவும் குறிப்பிட்ட சில கல்லூரிகளுக்கு மட்டும் தேர்வை நடத்துவது என்பது தேவையில்லாதது. மேலும், குறிப்பிட்ட சில கல்லூரிகளுக்கு மட்டும் இவர்கள் முதுநிலை படிப்பிற்கு ஒரு தேர்வை நடத்தும் போது மற்ற கல்லூரிகளிடம் இருந்து தனியாக பிரித்து ஒரு வேறுபாட்டை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இத்தேர்வை நடத்துகிறார்கள். மற்ற மருத்துவ கல்லூரிகளை குறைத்தும், இத்தேர்வு நடைபெறும் கல்லூரிகளை மட்டும் உயர்த்தியும் காண்பிப்பதாகவே இது உள்ளது.

இந்தியாவில் சிறந்த 10 மருத்துவ கல்லூரிகளில் சென்னை மருத்துவ கல்லூரி உள்ளது. அப்படி இருக்கும் போது இத்தேர்வை இங்கு கொண்டுவரலாம். இனி-செட் தேர்வு மூலம் மருத்துவர்களுக்குள் எந்த ஒரு மாற்றமும் ஏற்பட்டுவிட போவதும் இல்லை. இது தான் உண்மை. ஒரு தேர்வு என்பது வெவ்வேறு பெயரில் மட்டுமே நடத்தப்படுகிறது. எனவே, பொதுவாக நீட் தேர்வை பின்தொடர்வதே சரியாக இருக்கும். ஜிப்மர் மருத்துவ கல்லூரியை ஒப்பிட்டு பார்க்கும் போது சென்னை மருத்துவ கல்லூரி ஆயிரம் மடங்கு உயர்வானதாகும். ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை விட எம்.எம்.சியில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

சென்னை மருத்துவ கல்லூரி 356வது ஆண்டு பொன்விழாவை முடித்துள்ளது. உலக அளவில் பெரிய கல்லூரியாக இது உள்ளது. உலகத்திலேயே முதலில் எக்ஸ்ரே என்ற யூனிட் கொண்டுவரப்பட்டது இங்கு தான். தமிழகத்தை பொறுத்தவரையில் எம்.எம்.சி கல்லூரிக்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளது. தமிழகத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு மருத்துவத்திற்கு செல்பவர்கள் என்பது மிகவும் குறைவு. ஆனால், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு மருத்துவத்திற்கு வருபவர்களே அதிகம். மத்திய அரசுக்கு கீழ் வந்தால் அது தரமான கல்லூரி என்ற பிம்பத்தையே ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.

இதேபோல், தேர்வுகளின் பெயரை மாற்றி அறிவிக்கும் போது மாணவர்கள் மத்தியில் அது குழப்பத்தையே ஏற்படுத்தும். அரசே எது சரியானது என்று தெரியாமல் தேர்வு முறைகளை மாற்றி மாற்றி அறிவிக்கிறார்கள். மத்திய அரசு எந்த தேர்வு சிறந்த தேர்வு என்பதையே முடிவு செய்ய முடியவில்லை. மத்திய அரசு தனக்கு ஏற்பட்டுள்ள குழப்பத்தை மாணவர்கள் மேல் திணிக்கிறார்கள். ஜிப்மர் மருத்துவ கல்லூரியை ஒப்பிட்டு பார்க்கும் போது சென்னை மருத்துவ கல்லூரி ஆயிரம் மடங்கு உயர்வானதாகும். சென்னை மருத்துவ கல்லூரி 356வது ஆண்டு பொன் விழாவை முடித்துள்ளது. உலக அளவில் பெரிய கல்லூரியாக இது உள்ளது. உலகத்திலேயே முதலில் எக்ஸ்ரே என்ற யூனிட் கொண்டுவரப்பட்டது இங்கு தான்.

Related Stories: