சென்னையில் திரைப்பட தயாப்பாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு: வாக்காளர்களுக்கு பணம் அளித்ததாக ஒருதரப்பினர் புகார்

சென்னை: திரைப்பட தயாப்பாளர் சங்க தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அங்கு இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. தயாரிப்பாளர் சங்கதின் தேர்தல் அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்.ஜானகி கல்லூரியில் இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 2 மணி நேரத்திற்கு மேலாக தேர்தலானது நடைபெற்று வரும் நிலையில் ஒரு தரப்பினர் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு பணம் அளித்ததாக புகார் எழுந்திருக்கிறது.

இது தொடர்பாக தயாரிப்பாளர் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்கள். அது மட்டுமின்றி தயாரிப்பாளர் சங்க தேர்தலை முறையாக நடத்த வேண்டும், இதுபோன்று பணம் கொடுத்தது வாக்குகளை வாங்கக்கூடாது, தேர்தல் அதிகாரி இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்கள். தொடர்ந்து, தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்காளர்களுக்கு யார் பணம் கொடுத்தார்கள் என்பது குறித்து செய்தியாளர்களிடம் தயாரிப்பாளர்கள் விளக்கி கொண்டிருக்கிறார்கள்.

இதுபோன்று வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தமிழ்நாட்டுக்கே ஒரு தவறான முன்னுதாரணம் என்று தயாரிப்பாளர் கூறுகின்றனர். மேலும் இது போன்ற செயலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் எனறும் கோரிக்கை வைத்தனர். பணம் குடுத்து வெற்றி பெற முடியும் என்ற எண்ணம் இதை பார்க்கும் மக்கள் மனதில் நின்றாள் தமிழகத்தில் மீண்டும் ஒரு தவறான அரசாங்கம் ஆட்சிக்கு வரும் என்று கூறியுள்ளனர். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்காளர்களுக்கு ரூ. 4,000 ரொக்கப்பணமும் தங்க நாணயமும் வழங்கப்பட்டதாக தயாரிப்பாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories: