மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிக்கு அடிக்கல்..!! ரூ.380 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்க திட்டத்தை பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார் அமித்ஷா

சென்னை: பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று சென்னை வந்துள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அவர், இன்று மதியம் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைந்தார். விமான நிலையத்தில் மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், தமிழக அமைச்சர்கள் பாஜக மூத்த, முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து விமான நிலையத்திலிருந்து எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்ல அமித்ஷா வந்து சேர்ந்தார்.

பின்னர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் பங்கேற்றுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நினைவு பரிசு வழங்கினர். முதலமைச்சர் விநாயகர் சிலையையும், துணை முதலமைச்சர் நடராஜர் சிலையையும் நினைவுப்பரிசாக வழங்கினர். சென்னை கலைவாணர் அரங்கில் மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உருவப்படங்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். பின்னர் மத்திய அமைச்சர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

* ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

* சென்னை வர்த்தக மையம் ரூ.309 கோடியில் விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்

* திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்க திட்டத்தை  மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

* கரூர் மாவட்டம் நஞ்சை புகளூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டத்திற்கு  அடிக்கல் நாட்டினார்.

* கோவை - அவினாசி சாலையில் ரூ.1,620 கோடியில் உயர்மட்ட சாலைத்திட்டத்திற்கு  அடிக்கல் நாட்டினார்.

* வல்லூரில் ரூ.900 கோடியில் இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோலிய முனையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

* அமுல்லைவாயிலில் ரூ.1400 கோடியில் Lube Plant அமைக்கும் திட்டத்திற்கும் அடிக்கல்.

Related Stories: