வலிமை படப்பிடிப்பில் விபத்து: நடிகர் அஜித் குமார் காயம்

சென்னை: போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கும் படம், ‘வலிமை’’. அஜித் குமார், ஹுமா குரேஷி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா லாக்டவுனுக்கு  பிறகு லாக்டவுன் அமலானதை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், கடந்த சில வாரங்களுக்கு முன் ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் மீண்டும் ‘’வலிமை’ படப்பிடிப்பு தொடங்கியது.

அப்போது அஜித் குமார் மின்னல் வேகத்தில் பைக் ஓட்டி நடித்த காட்சி படமாக்கப்பட்டது. ஐதராபாத்தில் கடுமையான மழை பெய்து, ஸ்டுடியோவில் உள்ள தார் ரோட்டில் தேங்கியிருந்த மழைநீர் காரணமாக பைக் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அஜித் குமார், ஹெல்மெட் அணிந்திருந்ததால் கீழே விழுந்தபோதும் தலையில் காயமின்றி சுதாரித்து எழுந்துகொண்டார். இதில் அவரது கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது.

Related Stories: