சட்டமன்ற தேர்தலையொட்டி உதயநிதி ஸ்டாலின் 100 நாட்கள் பிரசாரம்: திருக்குவளையில் இன்று தொடங்குகிறார்

சென்னை: சட்டன்ற தேர்தலையொட்டி திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 100 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். முதல்கட்டமாக திருக்குவளையில் இன்று பிரசாரத்தை தொடங்குகிறார். தமிழக சட்டப் பேரவை தேர்தலை சந்திக்க  அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இதற்காக திமுக முழுவீச்சில் ஆயத்தமாகி வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் முப்பெரும் விழாக்களில் காணொலிக் காட்சி மூலமாக கலந்து கொண்டார். அப்போது கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கினார். தொடர்ந்து “தமிழகம் மீட்போம்” எனும் தலைப்பிலான “2021-சட்டமன்றத் தேர்தலுக்கான சிறப்புப் பொதுக்கூட்டங்கள்” வாயிலாக கட்சியினர், தொண்டர்களிடையே மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.

தொடர்ந்து தேர்தல் அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவும், அனைத்து தரப்பு மக்களையும் நேரில் சந்தித்து ஆலோசனைகளை கேட்டு வருகிறது. கருத்துக்களை கேட்ட பின்னர் அந்த குழு அறிக்கையை மு.க.ஸ்டாலினிடம் வழங்கும். அதன் பிறகு அந்த குழுவினருடன்ஆராய்ந்து தேர்தல் அறிக்கையாக மு.க.ஸ்டாலின் வெளியிடுவார்.

இந்த நிலையில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் சுமார் 100 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் இன்று மாலை உதயநிதி ஸ்டாலின் முதல்கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார்.தொடர்ந்து அவர் திருவாரூர், நாகை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட ெடல்டா மாவட்டங்களில் 10 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இதற்கான ஏற்பாடுகளில் கட்சியினர் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: