சாலையை சீரமைக்க கோரி திருவில்லிபுத்தூரில் நாற்று நடும்போராட்டம்

திருவில்லிபுத்தூர்: சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க கோரி திருவில்லிபுத்தூரில் இன்று காலை நாற்று நடும் போராட்டம் நடந்தது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம் தவிர்த்தான் பகுதியில் இருந்து நாகபாளையம் விலக்கு வரை உள்ள சாலைகள் சேதமமைந்து மிகவும் மோசமாக உள்ளது. மேலும் அப்பகுதியில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் பயனில்லை. தொடர்ந்து இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அச்சம் தவிர்த்தான் பகுதியில் உள்ள நரியின்குளம் இடத்தில் சாலையில் நாற்று நடும் போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார் தலைமை வகித்தார். போராட்டத்தில் மாநில குழு உறுப்பினர் சுகந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைப்போல், பிள்ளையார்குளம் ராமகிருஷ்ணபுரம் புதூர் பகுதியில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், மாவட்ட குழுவை சேர்ந்த ஜோதிலட்சுமி தலைமையில் நாற்று நடும் போராட்டம் நடந்தது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Related Stories: