பச்சிளம் குழந்தைகள் இறப்பு 15 சதவீதமாக குறைவு: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: பச்சிளம் குழந்தை பராமரிப்பு வாரம் மற்றும் உலக நீரிழிவு நோய் தினத்தையொட்டி சென்னை ஸ்டாலின் அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் பச்சிளம் குழந்தைகள் மேம்பாடு குறித்த  கையேட்டை வெளியிட்டு, பச்சிளம் குழந்தை பிரிவில் பணியாற்றும் செவிலியர்களுகளுக்கு விருதுகளை வழங்கிய பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி : இந்திய அளவில் பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் 32 ஆக உள்ள நிலையில் தமிழகத்தில் 17 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் 23 மாவட்டங்களில் தாய்ப்பால் வங்கி செயல்படுகிறது. இதன் மூலம் 70948 குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர். அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் இந்த தாய்ப்பால் வங்கி இந்தாண்டு விரிவுப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: