மத்திய பிரதேசத்தில் பசுக்களின் பாதுகாப்பிற்காக 'Cow Cabinet'என்ற மாட்டு அமைச்சகம் உருவாக்கம் : முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவிப்பு!!

போபால் : மத்தியப் பிரதேசத்தில் கால்நடைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக Cow Cabinet என்ற  மாட்டு அமைச்சகம் ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் பசுக்கள் நீண்ட காலமாக நாட்டில் விவாத மையத்தில் உள்ளன. பசு மாடுகளை பாதுகாக்க, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் பலவிதமான நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில்,  மத்தியப் பிரதேச மாநிலமும் அதற்கு விதி விலக்கு அல்ல. கடந்த 2018ம் ஆண்டில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சிவ்ராஜ் சிங் சவுகான், மத்தியப் பிரதேச பசு வாரியத்தை மாற்றி ஒரு மாடு நல அமைச்சகத்தை அமைப்பதாக அறிவித்திருந்தார். அதே போல மத்திய பிரதேசத்தில் மாட்டுக்காக தனியாக ஓர் அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும் என மாநில அமைச்சர் ஒருவரும் வலியுறுத்தி வந்தார்.

இந்த நிலையில் மத்தியப் பிரதேசத்தில் கால்நடைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக Cow Cabinet என்ற  மாட்டு அமைச்சகம் உருவாக்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், மத்தியப் பிரதேசத்தில் கால்நடைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக Cow Cabinet என்ற மாட்டு அமைச்சகம் உருவாக்கப்படுகிறது. இந்த அமைச்சகத்தில் கால்நடை பராமரிப்பு, வன, பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி, வருவாய், வீடு மற்றும் உழவர் நலத்துறை ஆகிய துறைகள் அடங்கும். புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையின் முதல் கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை கோபாஷ்டமியை முன்னிட்டு அகர் மால்வாவில் நடைபெறும், என ஹிந்தியில் ட்வீட் செய்துள்ளார். இதே போல அண்மையில்  மாடுகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும், காளை மாடுகள் குறித்த தகவல்களை விவசாயிகள் பெற வேண்டும் என்பதற்காக பிரத்யேக இணைய சேவையை மத்தியப் பிரதேசத்தின் கால்நடைகள் பராமரிப்பு அமைச்சகம்.தொடங்கியது குறிப்பிடத்தக்கது.  

Related Stories: