கொரோனா விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதை அதிகாரிகள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்: உள்ளாட்சி துறை செயலாளர் அறிவுறுத்தல்

சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாமல்  ெவளியில் சுற்றுவதற்கு 200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே மாஸ்க் அணிகின்றனர். இந்நிலையில், சென்னையில் கொரோனா விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் வசூலிக்கும் நடைமுறையை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்று  நகராட்சி நிர்வாக துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வழங்கிய அறிவுறுத்தலில், ‘‘கடந்த சில நாட்களாக கொரோனா விதிகளை மீறியவர்களிடம் இருந்து தினசரி வசூலிக்கப்படும்  அபராதம் 4 லட்சத்தில் இருந்து ₹50  ஆயிரமாக குறைந்துள்ளது. எனவே அனைத்து வட்டார துணை ஆணையர்கள், மண்டல அலுவலர்கள், சுகாதார  அலுவலர்கள் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. தற்போதுவரை  சென்னையில்  3 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Related Stories: