அரசு அனுமதித்தால் மட்டுமே முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்படும்: கள இயக்குநர் தகவல்

ஊட்டி: மத்திய, மாநில அரசுகள் அனுமதித்தால் மட்டுமே  முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்படும் என கள இயக்குநர் தெரிவித்தார். கொரோனா ஊரடங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள தற்போது பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் வருவதற்கும் இ பாஸ் முறை எளிமையாக்கப்பட்டு தற்ேபாது பதிவு செய்தால் மட்டுேம போதுமானது என அரசு தெரிவித்துள்ளது. இதனால், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்படாத நிலையில், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.

சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியியல் பூங்கா திறக்கப்பட்ட நிலையில், முதுமலை புலிகள் காப்பகமும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்படவில்லை. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், புலிகள் காப்பகத்தை பாதுகாப்புடன் திறக்கலாம் என முதுமலை புலிகள் காப்பகம் பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது. எனினும், மத்திய, மாநில அரசுகள் இதனை திறக்க இதுவரை அனுமதிக்கப்படவில்தலை. இது அனைவரையும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது.

முதுமலை புலிகள் காப்பக கள இயக்கநர் கவுசல் கூறியதாவது: முதுமலை புலிகள் காப்பகம் திறப்பது குறித்து இது வரை எங்களுக்கு எவ்வித கடிதமும் கிடைக்கப் பெறவில்லை. மத்திய, மாநில அரசுகள் அனுமதியளித்தால் மட்டுமே புலிகள் காப்பகம் திறக்கப்படும், என்றார். முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்படாத நிலையில், கூடலூர், மசினகுடி, ஊட்டி போன்ற பகுதிகளில் உள்ள வியாபாரிகள், சுற்றுலா கார் ஓட்டுநர்கள் மற்றும் மசினகுடி பகுதியில் உள்ள காட்டேஜ் உரிமையாளர்கள் மட்டுமின்றி, அவர்களை நம்பியுள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: