மலையாள நடிகருடன் ஒரு அடார் லவ் பட நடிகை நிச்சயதார்த்தம்

சென்னை: நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் தன் கண்களை சிமிட்டும் காட்சிக்காக பிரபலமான மலையாள படம், ஒரு அடார் லவ். பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இதில் பயாலஜி டீச்சர் வேடத்தில் நடித்தவர், ரோஷ்னா ஆன்  ராய். தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வரும் அவரும், மலையாளத்தில் அங்கமாலி டைரிஸ் என்ற படம் உள்பட சில படங்களில் நடித்துள்ள கிச்சு டெல்லஸ் என்பவரும் காதலித்தனர். விரைவில் தங்கள் திருமணம் நடக்கும் என்று சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர்.

இதையடுத்து அவர்கள்  திருமண நிச்சயதார்த்தம், நேற்று முன்தினம் கொச்சிதேவாலயம் ஒன்றில் நடந்தது. அந்த போட்ேடாக்களை வெளியிட்டுள்ள ரோஷ்னா ஆன் ராய், ‘இந்த வாழ்க்கையை தொடர்வதை நான் உற்சாகமாக உணர்கிறேன். உண்மையான காதல் இருக்கிறது என்று  நிரூபித்ததற்கும், என்னை நேசித்ததற்கும் நன்றி கிச்சு’ என்று கூறியுள்ளார். திருமண தேதி குறித்து சொல்லவில்லை.

Related Stories: