ரூ.1200 கோடி பட்டாசுகள் விற்பனையாகாததால் பட்டாசு உற்பத்தியாளர்கள் கலக்கம்: மீண்டும் பட்டாசு உற்பத்தியை தொடங்குவதில் சிக்கல் உள்ளதாக தகவல்

சிவகாசி: ரூ.1200 கோடி பட்டாசுகள் விற்பனையாகாததால் பட்டாசு உற்பத்தியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளதோடு மீண்டும் பட்டாசு உற்பத்தியை தொடங்குவதில் சிக்கல் உள்ளதாக தகவல் பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். எதிர்காலம் கேள்விகுறியானதால் தொழிலாளர்கள் கலக்கத்தில் உள்ளதாக கூறினர். வெளிமாநிலத்துக்கு ஆனுப்பப்பட்ட சிவகாசி பட்டாசுகள் பெருமளவில் தேக்கம் அடைந்தது. தமிழ்நாட்டிலும் பட்டாசு விற்பனை மந்தமானதால் உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். வரலாறு காணாத இழப்பால் பட்டாசு உற்பத்தியாளர் விற்பனையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். எதிர்காலம் கேள்விகுறியானதால் 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்கள் கலக்கம் அடைந்தனர்.

இந்நிலையில் கொரோனாவால் வழக்கத்தைவிட 50 சதவீத குறைவாகவே பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர். குறைவாக உற்பத்தியான பட்டாசும் முழுமையாக விற்பனையாகவில்லை எனவும் கூறினர். டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் திடீரென தடை விதிக்கப்பட்டதால் பட்டாசுகள் முற்றிலும் தேக்கம் அடைந்துள்ளது. பட்டாசு தொழிலே கேள்விக்குறியாகி விட்டதாக உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

Related Stories: