மதுரையில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் இருவர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி..!! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: மதுரையில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் இருவர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டார். சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் மறைவுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்தார். பணியின் போது காயம் அடைந்த கல்யான்குமார், சின்னக்கருப்பு விரைவில் பூரண குணமடைய வேண்டும் என கூறினார். மதுரை மாவட்டம் தெற்குமாசி வீதியில் பாபுலால் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது.

இந்தக் கடையில் நேற்று நள்ளிரவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து வந்த வந்த தீயணைப்பு வீரர்கள் நள்ளிரவில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தீயணைப்பு வீரர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு பயங்கர தீக்காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், இந்த தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்த தீயணைப்பு வீரர்கள் 2 பேருக்கு தலா ரூ. 2 லட்சமும் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: