பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் நவ.30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்: வேளாண் இணை இயக்குனர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கோல்டி பிரேமாவதி வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2020-21ம் ஆண்டு நடப்பு சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிருக்கு திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் இப்கோ டோக்கியோ நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதில், அரசு வழிகாட்டுதலின்படி மொத்த இழப்பீடு தொகையில் 80 சதவீதம் தமிழக அரசும், 20 சதவீதம் காப்பீடு நிறுவனமும் வழங்க உள்ளன. சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.451 பிரீமியம் தொகை செலுத்த வேண்டும்.

சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல்பயிர் காப்பீடு செய்ய வரும் 30ம் தேதி கடைசி நாள் ஆகும். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்ய, பொது சேவை மையம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளை அணுகி காப்பீடு செய்யலாம். எனவே, எதிர்பாராத இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசுல் இழப்பை தவிர்க்க உடனடியாக அனைத்து விவசாயகளும் சம்பா நெல்பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: