தொற்றில்லா நோய்களை கண்டறிய 20 கிராமங்களில் சுகாதார நல்வாழ்வு முனையம்: அரசாணை வெளியீடு

சென்னை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது : தமிழகத்தில் 30 சதவீதம் பேருக்கு ரத்த அழுத்தம், 25 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோய், 15 முதல் 49 வயது வரை உள்ள பெண்களில் 29 சதவீதம் பேருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளது. எனவே தொற்று அல்லாத நோய்களை எளிதல் கண்டறிந்து தொடர் சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை ஆரம்ப சுகாதார நிலையங்கள் செய்ய வேண்டும். எனவே இதற்கான உபகரணங்கள் வாங்குவது மற்றும் பணிகளை மேற்கொள்ள ரூ. 60 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாநில சுகாதார சங்கம் இந்த திட்டத்தை செயல்படுத்தும். இதைத்தவிர்த்து 20 கிராமங்களில் சுகாதார மற்றும் நல்வாழ்வு முனையம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக ஒவ்வொரு மையத்திற்கும் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்களில் நடைபாதை, உடற்பயிற்சி மையம் அமைக்கப்படவுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: