ஆடுகளுக்கான நோய்த் தடுப்பூசி முகாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டத்தில் 3 லட்சம் ஆடுகள் உள்ளன. ஆடு வளர்க்கும் குடும்பங்களில் அவ்வப்பொழுது நேரிடும் அவசர அத்தியவசிய தேவைகளின் பொழுது தங்களது இருப்பிலுள்ள ஒன்றிரண்டு ஆட்டுக் குட்டிகளை விற்று தேவையை ஈடு செய்து வருகின்றனர். அத்தகைய ஏழை மக்களின் ஆடுகளில் ஆட்டுக்கொல்லி என்னும் வைரஸ் நோய் தாக்கம் சமீப காலங்களில் ஏற்பட்டு வருகிறது. நோய்த் தாக்கப்பட்ட வெள்ளாடுகளில் 80 சதவிகிதம் வரையும் செம்மறி ஆடுகளில் 10 சதவிகிதம் வரையும் இறப்பு நேரிடும் வாய்ப்பு உள்ளதால் மிகப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தக்கூடிய கொடிய நோய் ஆகும், இதனாலாயே இந்நோய்க்கு ஆட்டுக்கொல்லி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நோய்த் தாக்கிய ஆடுகளில் காய்ச்சல் இருமல் சளி கழிச்சல் கருச்சிதைவு முதலான அறிகுறிகள் தென்படும். இந்நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசிப் பணிகள் நேற்று துவக்கப்பட்டது. இது 21 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆடுகளை வளர்ப்போர், தடுப்பூசி போடும் தேதி, இடம் குறித்த விபரங்களைத் தங்கள் பகுதியிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் கேட்டு அறிந்து தங்களது கிராமத்தில் தடுப்பூசி போடப்படும் தினத்தில் அனைத்து ஆடுகளுக்கும் தடுப்பூசி போட்டு பாதுகாத்துக் கொள்ளுமாறு கலெக்டர் பா.பொன்னையா  தெரிவித்துள்ளார்.

Related Stories: