திருப்போரூர் முருகன் கோயில் நிலத்தில் மதிற்சுவர் கட்டும் பணி மீண்டும் தொடக்கம்: பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

திருப்போரூர்: திருப்போரூர் முருகன் கோயில் நிலத்தில் மதிற்சுவர் கட்டும் பணி மீண்டும் தொடங்கப்பட்டது. இதற்கு, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான வேம்படி விநாயகர் கோயில், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ளது. கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் வேம்படி விநாயகர் கோயிலை சுற்றிலும் மதிற்சுவர் அமைக்க 10.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி தொடங்கியது.

கோயிலையொட்டியுள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள், மதிற்சுவர் எழுப்பினால் நாங்கள் பிரதான சாலைக்கு செல்ல முடியாது. நீண்ட தூரம் சுற்றி வரவேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து குடியிருப்புவாசிகள் செல்வதற்காக வழிவிட்டு சுவர் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் 6 ஆண்டுகள் கழித்து கோயில் நிர்வாகம் சார்பில் மீண்டும் மதிற்சுவர் மற்றும் பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.  இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள், தாங்கள் போய் வர விழிவிட்டு மதிற்சுவர் கட்டும்படி கோரிக்கை வைத்,து கோயில் நிர்வாகத்திடம் மனு அளித்து, செயல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கோயில் செயல் அலுவலர் சக்திவேல், பொதுமக்கள் பிரதான சாலைக்கு செல்லும் வகையில் வழிவிட்ட பிறகு மதிற்சுவர் கட்டும் பணி நடக்கும் என கூறினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories: