டெல்லி ஜே.என்.யூ.பல்கலைக்கழக வளாகத்தில் சுவாமி விவேகானந்தர் சிலையை காணொலி மூலம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி

டெல்லி: டெல்லி ஜே.என்.யூ.பல்கலைக்கழக வளாகத்தில் சுவாமி விவேகானந்தர் சிலையை காணொலி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசினார். ஜே.என்.யுவில் உள்ள சுவாமி விவேகானந்தரின் சிலை அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் மற்றும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். இந்த சுவாமிஜி சிலையை பார்க்கும் அனைவருக்கும் தேசத்தின் மீதான பக்தியையும் தீவிரமான அன்பையும் கற்பிக்கும் என்று நம்புகிறேன்.

சுவாமி விவேகானந்தர் கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் மெச்சிகன் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற போது இந்த நூற்றாண்டு உங்களுடையது என்றாலும், அடுத்த நூற்றாண்டு இந்தியாவுக்கு சொந்தமானது என்று கூறியிருந்தார். இந்த வார்த்தையும், எதிர்காலபார்வையையும் உணர வேண்டியது நமது பொறுப்பு ஆகும். அவரது சிலை அனைவருக்கும் தேசத்தின் மீதான பக்தியையும் தீவிரமான அன்பையும் கற்பிக்கிறது என்று நம்புகிறேன். இது விவேகானந்தர் வாழ்க்கையின் மிக உயர்ந்த செய்தி. ஒற்றுமை குறித்த பார்வையில் இது நாட்டிற்கு ஊக்கமளிக்கட்டும். தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட விவேகானந்தர் சிலையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

Related Stories: