17 பேர் உயிரை காவு வாங்கிய தீண்டாமை சுவர் மீண்டும் கட்டப்பட்டது : மேட்டுப்பாளையம் அருகே பெரும் பரபரப்பு

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே 17 பேர் உயிரை காவு வாங்கிய தீண்டாமை சுவர் மீண்டும் கட்டப்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . மேட்டுப்பாளையம் அருகே நடூரை சேர்ந்தவர் தொழிலதிபர் சிவா சுப்பிரமணியன். இவர் தனது வீட்டிற்கும் பட்டியலினத்தவர் வாழும் பகுதிக்கும் இடையில் தீண்டாமை சுவர் எழுப்பியுள்ளார்.

 கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட கனமழையால் அந்த சுவர் இடிந்துவிழுந்து 5வீடுகள் தரை மட்டமாகின. இதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடையும் நிலையில் வீட்டின் உரிமையாளர்  மீண்டும் சுற்றுச்சுவர் கட்டுமான பணியை தொடங்கி நிறைவு செய்துள்ளார்.

அதே இடத்தில்மீண்டும் எழுந்த தீண்டாமை சுவர் அப்பகுதி மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்ப்ப்டுத்தியுள்ளது. மேலும் கடந்த ஆண்டு தங்களை சந்தித்த ஆளும் கட்சி MLA க்கள் புதிய விடுகாட்டித்தருவதாக அளித்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை என வீடுகளை இழந்த மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 புதிய சுற்றுச்சுவர் விதிமுறைகளுக்கு  உட்பட்டு மண்ணரிப்பு ஏற்படாத விதத்தில் கட்டப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார். ஆனால் சுவற்றின் உறுதி தன்மை குறித்து நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்க்கொண்டு தங்களின் அச்சத்தை போக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: