ஐபிஎல் 2020 வரலாற்றில் டெல்லி அணியை வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி

துபாய்: ஐபிஎல் 2020 இறுதி போட்டியில் டெல்லி அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஏற்கனவே 4 முறை கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ள மும்பை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது.

டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்டாய்னிஸ், தவான் இருவரும் போட்டியை துவக்கினர். மும்பை அணியின் போல்ட் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் கீப்பர் டி காக் வசம் கேட்ச் கொடுத்து ஸ்டாய்னிஸ் வெளியேறினார்.  அடுத்து அடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய டெல்லி அணியை கேப்டன் ஷ்ரேயாஸ் - ரிஷப் பன்ட் ஜோடி பொறுப்புடன் விளையாடி சரிவில் இருந்து மீட்கப் போராடியது. டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் 38 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார்.  

இந்த ஜோடியின் உறுதியான ஆட்டத்தால் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஸ்கோர் 13 ஓவரில் 100 ரன் எடுத்தது. டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன் குவித்தது. மும்பை பந்துவீச்சில் போல்ட் 3, கோல்டர் நைல் 2, ஜெயந்த் 1 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 18.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மும்பை அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 51 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 20 ஓவரில் 157 ரன் எடுத்தால் கோப்பையை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற இலக்குடன் மும்பை களமிறங்கியது.

Related Stories: