குழந்தை தொழிலாளராக மாறிய மாணவர்கள்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள ஒட்டர் கரட்டுப்பாளையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி: நூலகங்களை கூடுதல் நேரம் திறக்க முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து கருத்து கேட்பு கூட்டம் நாளை (இன்று) நடக்கிறது. இதில் பெற்றோர் கூறும் கருத்துகளை வைத்தே முடிவு எடுக்கப்படும். நீட் தேர்வு பயிற்சிக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர் புகார் அளித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் ஒவ்வொரு பள்ளியாக சென்று விசாரிக்க முடியாது. பள்ளிகளை திறக்க முதல்வர் தேதியை நிர்ணயம் செய்தால், குழந்தை தொழிலாளர்களாக மாறிய மாணவர்கள் பள்ளிக்கு வர தயாராக உள்ளனர். 9,10,11 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. 2,505 பள்ளிகளுக்கு தடையில்லா சான்று 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: