அயோத்தி ராமர் கோயில் வடிவமைப்பு மக்கள் ஆலோசனை வழங்கலாம்

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக தனிநபர்கள், கட்டிட வடிவமைப்பாளர்களிடம் இருந்து வடிவமைப்பு ஆலோசனைகள் வரவேற்கப்படுவதாக ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறிவித்துள்ளது. ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ராமர் கோயில் கட்டுவதற்காக தனிநபர்கள், சமூக வல்லுநர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களிடம் இருந்து ராமர் கோயில் வளாகத்திற்கான வடிவமைப்பு குறித்த ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றது. தேர்வு  செய்யப்படும் மாதிரியானது, கோயிலின் முதன்மை வரைப்படத்துடன் இணைக்கப்படும்.  

வடிவமைப்பு மாதிரிகள், ஆலோசனைகளை அனுப்பிவைப்பதற்கு நவம்பர் 25ம் தேதி கடைசி நாளாகும். இதற்கு முன்னதாக வடிவமைப்பு குறித்த ஆலோசனைகளை அறக்கட்டளை குறிப்பிட்டுள்ள இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

எந்த ஒரு வடிவமைப்பு ஆலோசனையையும் ஏற்றுக்கொள்வதற்கோ, நிராகரிப்பதற்கோ அல்லது அவற்றை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான இறுதி முடிவு எடுப்பதற்கான அனைத்து அதிகாரமும் அறக்கட்டளைக்கு உள்ளது. இந்த ஆலோசனைகள் கோயிலை சுற்றியுள்ள 70 ஏக்கர் நிலத்தை அபிவிருத்தி செய்வதற்காக பயன்படுத்தப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: