இந்திய - சீன விவகாரம்: நாளை மறுநாள் பேச்சு

புதுடெல்லி: இந்தியா, சீனா நாடுகளுக்கும் இடையே கிழக்கு லடாக்கில் இரு நாட்டு ராணுவத்தினருக்கு இடையே நீடித்து வரும் மோதல் போக்கை சரி செய்யும் வகையில், கடந்த 7 மாதமாக தொடர்ந்து எல்லைப் பகுதி பரபரப்பாகவே காணப்படுகிறது. இருப்பினும், இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே சுமூக நிலை ஏற்படுவதற்கு பேச்சுவார்த்தையே சரியான வழி என்பதை இரு நாட்டு அரசுகளும் உணர்ந்து ஒப்புக் கொண்டு அதன்படி பேச்சுவார்த்தையும் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், ராணுவ அதிகாரிகளின் உயர் மட்ட அளவிலான 8வது சுற்று பேச்சுவார்த்தை வரும் 6ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: