டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரதமர் மோடியுடன் சந்திப்பு: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை.!!!

டெல்லி: டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசிய நிலையில் ஆளுநர் இன்று காலை திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டார். வரும் வெள்ளி வரை 3 நாட்கள் டெல்லியில் தங்கவுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தற்போது, டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் அமைந்துள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார்.

சந்திப்பின்போது, பாஜக வேல் யாத்திரை, பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை, 7.5% உள்ஒதுக்கீடு, தமிழக அரசியல் சூழல், தமிழக சட்டமன்றத் தேர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமருடன் ஆளுநர் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரையும் சந்தித்து பேசவுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக 8 மாதங்களுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: