பினீஷ் கோடியேரிக்கு மேலும் 5 நாள் காவல் போதைப் பொருள் கும்பலுக்கு ரூ5 கோடி கொடுத்தது அம்பலம்

திருவனந்தபுரம்: பினீஷ் கோடியேரியை மேலும் 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்கிடையே பெங்களூரு போதைப்பொருள் கும்பலுக்கு பினீஷ் கோடியேரி ரூ5 கோடிக்கும் ேமல்  பணம் கொடுத்துள்ளார் என்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பெங்களூரு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கோடியேரி  பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கோடியேரியை மத்திய அமலாக்கத்துறை கைது செய்தது.

இதேபோல் மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறையும் (என்சிபி) பினீஷ் கோடியேரிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்வது குறித்து ஆலோசித்து வருகிறது. இதற்கிடையே பினீஷ் கோடியேரியை மத்திய அமலாக்கத்துறை 4 நாள் காவலில் எடுத்து விசாரித்தது. இந்த விசாரணை காலம் நேற்று முடிவடைந்தது. இதையடுத்து அவர் ெபங்களூரு சிவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் பினீஷ் ேகாடியேரி சார்பில் ஆஜரான வக்கீல், பினீஷுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. 10 முறை வாந்தி எடுத்து உள்ளார். இது தவிர கடுமையான உடல் வலியும் உள்ளது. எனவே அவரை காவலில் விடக்கூடாது என்று வாதிட்டார்.

மத்திய அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், கடந்த 2012 - 2019 காலகட்டத்தில் அனூப் முகமது, பினீஷ் கோடியேரிக்கு இடையே ரூ5 கோடிக்கும் மேல் பண பரிமாற்றம் நடந்து உள்ளது. இதை போதைப்ெபாருள் கடத்தல் மூலமே சம்பாதித்து உள்ளனர். இவர்கள் ஹவாலா மூலமும் பணத்தை சேகரித்துள்ளனர். இதுதொடர்பான கேள்விகளுக்கு பினீஷ் கோடியேரி பதிலளிக்க மறுத்து வருகிறார். கடந்த 2 நாளாக உடல்நலக்குறைவு என்று கூறி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வருகிறார். பினீஷ் கோடியேரிக்கு எதிராக கேரளாவில் 10 வழக்குகளும், துபாயில் ஒரு வழக்கும் உள்ளது.

எனவே அவரிடம் கூடுதல் விசாரணை நடந்தவேண்டி உள்ளது. 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றார். இருதரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டார். பின்னர் பினீஷ் கோடியேரியை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க மத்திய அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதற்கிடையே பினீஷ் கோடியேரியின் பினாமி சொத்துக்கள் குறித்து மத்திய அமலாக்கத்துறை சிறப்பு குழு கேரள மாநிலம் பத்தனம்திட்டா அடூர், கோன்னி போன்ற இடங்களில் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் பினீஷ் கோடியேரியை சந்திக்க அனுமதி கோரி, அவரது சகோதரர் பினோய் கோடியேரி கர்நாடக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு 5ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Related Stories: