அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சத்யபிரத சாகு ஆலோசனை...!! வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக ஆலோசனை

சென்னை: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக  அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தி வருகிறார். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக அங்கரீக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெற்ற  இந்த ஆலோசனை கூட்டத்தில், அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான திமுக சார்பாக ஆர்.எஸ். பாரதி,  என்.ஆர். இளங்கோவன், அதிமுக சேர்ந்த துணை சபாநாயகர் பொள்ளாட்சி ஜெயராமன், மனோஜ்பாண்டியன் மற்றும் காங்கிரஸ், தேமுதிக, பா.ஜ.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய வாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 9 கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

இதற்கு பின்னர் பின்னர் ஆர்.எஸ். பாரதி  செய்தியாளர்களிடம் பேசினார் அவர் கூறியதாவது; வாக்காளர் பட்டியல் நேர்மையாகவும் நியாயமாக முறையில் வெளியிடப்பட வேண்டும் என்றார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரியில் 40 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டது அதேபோல் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நடைபெற கூடாது என்றும் வலியுறுத்தியாதாக தெரிவித்தார். 80வயதுக்கு மேல் இருப்பவர்கள் தபால் ஓட்டு போடுவது குறித்தும் தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை நடத்தியதாகவும் ஆர்.எஸ் பாரதி தெரிவித்தார்.

Related Stories: