ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரிய வழக்கு: விராட் கோலி, தமன்னாவுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ்

மதுரை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரிய வழக்கு விவகாரத்தில் விராட் கோலி, தமன்னாவுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சுதீப், ராணாவுக்கு உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுரை, அண்ணாநகரைச் சேர்ந்த வக்கீல் முகமது ரஸ்வி, ஐகோர்ட் மதுரை கிளையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரிய மனு தாக்கல் செய்திருந்தார்.

பள்ளி பிள்ளைகள் மத்தியில் தற்போது மொபைல் வீடியோகேம்கள் பிரபலமாக இருந்துவருவதை போல, கல்லூரி மாணவர்கள், வேலையில்லா பட்டதாரிகள் மத்தியில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு மவுசு கூடி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும் செய்யப்படும் விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு, இளைஞர்கள் ஆன்-லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி வருவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான விளம்பரங்களில் நடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: