கனமழையால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பெரியகுளம்: பெரியகுளம் அருகே 8 கி.மீ.தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் பெய்யும் மழை காரணமாக கும்பக்கரை அருவியில் நீர்வரத்து இருக்கும். வருடம் முழுவதும் இந்த கும்பக்கரை அருவியில் தண்ணீர் இருப்பதால் இந்த அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை இருக்கும். தற்போது கொரோனா காலம் என்பதால் அருவிக்கு சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. இந்நிலையில் கும்பக்கரை அருவிக்கு மேல் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென் மேற்கு பருவமழை துவங்கியது முதல் போதிய மழைப்பொழிவு பெய்யாது போனதால் அருவிக்கு வரும் நீர் வரத்து குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்ச்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக, அருவியில் நீர்வரத்து துவங்கி அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கும்பக்கரை அருவிக்கு கீழ் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: