மெதுவடை

எப்படிச் செய்வது?

உளுந்தை ஒரு மணிநேரம் ஊற வைத்து, கெட்டியாக அரைக்கவும். இதனுடன் கட்டி விழாமல் பச்சரிசி மாவு சேர்த்து, நறுக்கிய வெங்காயம்,  பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகு, உப்பு சேர்த்துப் பிசைந்து, வட்டமாகத் தட்டி, காயும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். உளுந்து அரைத்தவுடன் வடை சுட வேண்டும். நேரம் கடந்தால் மாவு புளிக்க ஆரம்பித்து விடும். அதேபோல அதிகம் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டாம். பிறகு வடையில் எண்ணெய் இழுக்கும்.