வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக மாதுளங்குப்பம் ஏரியில் கலெக்டர் திடீர் ஆய்வு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மாதுளங்குப்பம் பகுதியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதால், ஏரியில் தண்ணீர் வரத்து, சேமிப்பு நிலை குறித்து கலெக்டர் ஜான் லூயிஸ் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது சமீபத்தில் ஏரிக்கரை மீது அமைக்கப்பட்ட தார்ச்சாலை குறுகலாக உள்ளதாகவும், இதனால் எதிர், எதிரே வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் விபத்து ஏற்படுகிறது. அந்த சாலையை அகலப்படுத்த வேண்டும். மண்சரிவு ஏற்படாமல் இருக்க பக்கவாட்டில் சுவர் அமைக்க வேண்டும்.

மாதுளங்குப்பம் பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்கள் சிலருக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. விடுபட்டவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு, பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார். தொடர்ந்து முத்திகை நல்லான் பகுதியில் கட்டப்படும் சமுதாய நலக்கூடத்தை பார்வையிட்டார். திருக்கழுக்குன்றம் தாசில்தார் பர்வதம், துணை தாசில்தார் கார்த்திக் ரகுநாத், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி செயல் அலுவலர் திருஞான சம்பந்தம், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் அம்பலவாணன், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆறுமுகம் உள்பட பலர் இருந்தனா்.

Related Stories: