கொரோனா விதிமீறி காஞ்சி. காமாட்சி அம்மன் கோயிலில் பொன்.ராதாகிருஷ்ணன் தரிசனம்

காஞ்சிபுரம், - முன்னாள் மத்திய இணை அமைச்சரும் பாஜகவின் மூத்த நிர்வாகியுமான பொன்.ராதாகிருஷ்ணன் காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள், சித்திரகுப்தர், குமரகோட்டம் முருகன்,  ஏகாம்பரநாதர் ஆகிய கோயில்களில் நேற்றிரவு தரிசனம் செய்தார். பின்னர், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தார்.

அரசு அனுமதித்த தரிசன நேரம் முடிந்த பிறகு 15 நிமிடம் தாமதமாக கோயிலுக்கு வந்த அவர், 30க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் கொரோனா விதிகளை மீறி சாமி தரிசனம் செய்தார்.

இரவு 8 மணிக்கு வெளிவந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

வேல் யாத்திரை நிறைவு பெறும்போது பல விஷயங்களுக்கு தெளிவு தானாக பிறக்கும். நடிகர் ரஜினிகாந்த் தெளிவாக தனது விளக்கம் அளித்துவிட்டார். இதில் பேசுவதற்கு ஒன்றுமில்லை.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.பாஜ முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது தொண்டர்களுடன் கொரோனா விதிமீறி கோயிலில் தரிசனம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Related Stories:

>