மஞ்சூர்-கோவை சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகளால் பரபரப்பு

மஞ்சூர்: மஞ்சூர்-கோவை சாலையில் வாகனங்களை வழி மறித்த காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது. மஞ்சூர்-கோவை  சாலையில் அமைந்துள்ள கெத்தை பகுதியில் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள்  முகாமிட்டுள்ளது. இதேபோல் கெத்தை அருகே முள்ளி பகுதியை ஒட்டியுள்ள கேரளா  வனப்பகுதிகளில் இருந்தும் ஏராளமான காட்டு யானைகள் இடம் பெயர்ந்து தமிழக  பகுதிகளில் ஊடுருவியுள்ளது. இந்த யானைகள் கெத்தை, முள்ளி, மானார்,  அத்திகடவு உள்ளிட்ட பகுதிகளில் நடமாடி வருவதுடன் சாலையில் ஆங்காங்கே நின்று  அவ்வழியாக சென்று வரும் வாகனங்களை வழிமறித்து வருவது வாடிக்கையாக உள்ளது.

நேற்று முன்தினம் மாலை மஞ்சூரில் இருந்து பயணிகள் சிலர் 2 கார்களில் கெத்தைக்கு  சென்று கொண்டிருந்தனர். மந்து என்ற இடம் அருகே சென்றபோது 3 காட்டு யானைகள் வழியை மறித்தபடி நடுரோட்டில் நின்று கொண்டிருந்தன. இதை கண்டவுடன் பயணிகள்  உடனடியாக வாகனங்களை ஓரங்கட்டி நிறுத்தினார்கள். இதற்கிடையே கெத்தையில்  இருந்து மஞ்சூர் நோக்கி சென்ற மின் வாரியத்துக்கு சொந்தமான வாகனமும் காட்டு  யானைகளின் வழிமறிப்பால் சிக்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல்  சாலையோரத்தில் இருந்த செடி,கொடிகளை பறித்து உலா வந்த யானைகள் பின்னர்  அங்கிருந்து காட்டுக்குள் இறங்கி சென்றது. இதன் பிறகே வாகன ஓட்டிகள்  அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Related Stories: