சென்னையில் இருந்து ஒரே விமானத்தில் எடப்பாடி, மு.க.ஸ்டாலின் மதுரை பயணம்

சென்னை: சென்னையிலிருந்து ஒரே விமானத்தில் முதல்வர் எடப்பாடியும், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் மதுரை புறப்பட்டு சென்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் நகரில் இன்று நடக்கும் தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும் நேற்று மாலை 5.15 மணிக்கு மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் மதுரை புறப்பட்டு சென்றனர்.இதற்காக மு.க.ஸ்டாலின் நேற்று மாலை 4.15 மணிக்கு சென்னை உள்நாட்டு விமானநிலையம் புறப்பாடு பகுதிக்கு  வந்து, கேட் எண் 1 வழியாக உள்ளே சென்றார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாலை 4.45 மணிக்கு சென்னை பழைய விமானநிலையம் வந்து கேட் எண் 6 வழியாக காரில் உள்ளே சென்றார். முதல்வரும், எதிர்கட்சி தலைவரும் வேறு வேறு வழிகளில் வேறு நேரங்களில் விமான நிலையத்திற்குள் வந்தாலும் இருவரும் ஒரே விமானத்தில் மதுரை புறப்பட்டு சென்றனர். விமானத்தில் 1 ஏ சீட் எடப்பாடிக்கும், 1 எப் சீட் மு.க.ஸ்டாலினுக்கும் ஒதுக்கப்பட்டு ஒரே வரிசையில் அமர்ந்து பயணித்தது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசியல் வரலாற்றில் இதேபோல் முதலமைச்சரும், எதிர்கட்சி தலைவரும் ஒரே விமானத்தில் பயணிப்பது நீண்ட நெடுங்காலத்திற்கு பின்பு நடந்துள்ளது.

Related Stories: