இன்று மீலாது நபி திருநாள் முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

சென்னை: மிலாது நபி திருநாளை முன்னிட்டு முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி:  மானுடம் தழைக்க இறைத்தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்தால், வாழ்வில் ஏற்றம் பெறலாம். இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த இந்த இனிய நாளில், உலகில் அன்பும், அமைதியும், சமாதானமும், சகோதரத்துவமும் தவழட்டும் என்று வாழ்த்தி, இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ‘மீலாதுன் நபி’ நல்வாழ்த்துகள்.துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: நபிகள் நாயகம் அவர்கள் அவதரித்த திருநாளை மகிழ்வோடு கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு எனது உளம் கனிந்த மீலாதுன் நபி நல்வாழ்த்துக்கள். இந்நன்னாளில் நபிகள் அருளிய போதனைகளை கடைபிடித்து இன்புற்று வாழ்வோம்.

கே.எஸ்.அழகிரி( தமிழக காங்கிரஸ் தலைவர்): நபிகள் நாயகம் போதனைகளின்படி அனைத்து மக்களிடையேயும் அன்பையும், ஏழை, எளிய மக்களிடம் பரிவையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுவதன் மூலம் வகுப்புவாத சக்திகளின் பிளவு அரசியலை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே, நபிகள் நாயகத்தின் பிறந்தநாளில் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் அவரது கொள்கைகளை பின்பற்றி மகிழ்ச்சியும், நலமும் பெற்று வாழ மீலாது நபி வாழ்த்துக்கள்.ராமதாஸ்(பாமக நிறுவனர்): உலகில் அன்பு, நட்பு, ஒற்றுமை, சகோதரத்துவம், சகிப்புத் தன்மை, எதிரிகளை மன்னிக்கும் பெருந்தன்மை ஆகியவை வளர்வதற்கும், அனைத்து நலன்களும், வளங்களும் பெருகவும் உழைக்க வேண்டும் என்று நபிகள் அவதரித்த இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்.வைகோ(மதிமுக பொது செயலாளர்): அண்ணலார் நபிகள் நாயகம் பிறந்த நாளாம் இப்பொன்னாளில், தமிழகத்தில் சமய நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க உறுதி கொள்வதோடு, இலாமியப் பெருமக்களுக்கு நெஞ்சினிக்கும் வாழ்த்துக்கள்.

அன்புமணி ராமதாஸ்(பாமக இளைஞர் அணி தலைவர்): இறைதூதர் நபிகள் நாயகம் போதித்த பாடங்களை அனைவரும் கடைபிடித்து ஒட்டுமொத்த உலகத்தையும் அமைதி, வளம், மகிழ்ச்சி, ஒற்றுமை நிறைந்ததாக மாற்ற இந்நாளில் உறுதியேற்போம்.டி.டி.வி.தினகரன்(அமமுக பொது செயலாளர்): அன்பு தான் உலகில் ஆகப்பெரிய சக்தி’ என்பதை போதித்த நபி பெருமகனாரின் பிறந்தநாளில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்க வாழ்த்துகிறேன்சரத்குமார்(சமக தலைவர்): மதச்சார்பின்மை என்னும் மகத்துவக் கொள்கை கொண்ட தேசத்தில் நபிகளாரின் சீரிய கொள்கைகளை கடைபிடிக்க உறுதியேற்போம்.பிரசிடெண்ட் அபுபக்கர்(இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர்): நபிகள் நாயகத்தின் போதனைகள் மனிதன் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கத்த அறிவுரைகளாகும். இந்த போதனைகளைப் பின்பற்றி வாழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த மிலாது நபி திருநாள் நல்வாழ்த்துகள்.

Related Stories: