பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்

சென்னை: பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்டங்களும் சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகள் பின்வருமாறு: கொரோனா உயிரிழப்பு, நோய்ப் பரவல், சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை, புதிய தொற்று ஆகியவற்றை துல்லியமாகத் கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும். இவை அனைத்துமே குறைந்து வந்தால் மட்டும் தொற்று குறைந்து வருவதாக கருத முடியும். பரிசோதனைகளையும், காய்ச்சல் முகாம்களையும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

பொது இடங்களில், குறிப்பாக சந்தைப் பகுதிகள், மால்கள் ஆகியவற்றில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவரப்படுத்த வேண்டும். அனைத்து நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், தாலுகா மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சல் சிகிச்சை மற்றும் மாதிரி சேகிரிப்பு வசதியை செயல்படுத்த வேண்டும். மக்கள் கூடும் இடங்களில் அனைவரும் முகக் கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். டெங்கு தடுப்பு மற்றும் பருவமழைக் கால நோய்களைத் தடுப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: