வீடுகளை உடைத்து சூறையாடிய யானைகள்

கூடலூர்: கூடலூர் அருகே பழங்குடியினரின் வீடுகளை உடைத்து சூறையாடிய காட்டு யானைகள் அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளை சாப்பிட்டு சென்றது. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள புலியம்பாறை பகுதியில் உள்ளது கோழிக்கொல்லி ஆதிவாசி குடியிருப்பு. இங்கு வசிப்பவர்கள் கோத்தன், சங்கரன், குஞ்சன். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இப்பகுதிக்கு ஐந்து யானைகள் கொண்ட யானை கூட்டம் வந்துள்ளது. இரவு நேரத்தில் வீட்டில் உள்ளவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது காட்டு யானைகள் சுற்றிவளைத்து வீட்டை உடைத்து சேதப்படுத்தி உள்ளன. யானைகள் முன்புறமாக விட்டு உடைத்தபோது வீட்டில் இருந்தவர்கள் பின்புறமாக வெளியேறி வேறு வழியில் சென்று அருகில் உள்ள மற்ற வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

வீட்டின் சுவர்களை உடைத்து முழுவதுமாக சேதப்படுத்திய காட்டு யானைகள், வீட்டின் உள்ளே இருந்த பொருட்களை வெளியே எடுத்து வீசி சூறையாடியதோடு, அரிசி பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் வெளியே இழுத்துச் சாப்பிட்டு சென்றுள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்த சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் அப்பகுதியில் விசாரணை நடத்தி சென்றுள்ளனர்.

Related Stories: