பெண்கள் ஆளுமையில் காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலெக்டர் முதல் அனைத்து துறைகளிலும் பெண்களே கோலோச்சுகின்றனர்.

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண்கள் ஆளுமை தமிழகத்தில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் பெண் ஆளுமைகளின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைமை பணிகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது, மாவட்ட கலெக்டராக மகேஸ்வரி, வடக்கு மண்டல காவல்துறை துணைத் தலைவராக சாமூண்டீஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சண்முகபிரியா, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலராக டாக்டர் அனுராதா, மாவட்ட சமூக நல அலுவலராக சங்கீதா பணிபுரிந்து வருகின்றனர். அதேபோன்று, மாவட்ட ஆதி திராவிட நல அலுவலராக தனலட்சுமி, மாவட்ட ஊட்டச்சத்து நல அலுவலராக சற்குணா, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநராக டாக்டர்.

ஜீவா, பெரும்புதூர் கோட்டாட்சியராக திவ்ய , காஞ்சிக் கோட்ட துணை காவல் கண்காணிப்பாளராக மணிமேகலை, காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையராக மகேஸ்வரி, காஞ்சிபுரம் வட்டாட்சியராக பவானி, வாலாஜாபாத் வட்டாட்சியராக மித்ரா தேவி, பெரும்புதூர் வட்டாட்சியராக நிர்மலா, மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளராக (  பொது) கியூரி ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.   இதன்மூலம் காஞ்சிபுரம் மாவட்டம் கிட்டத்தட்ட பெண்களின் நிர்வாகத்தின் கீழ் வந்துள்ளது. அவர்களின் பணி சிறக்க வேண்டும் என்று மாவட்ட மக்கள் வாழ்த்துகிறார்கள்.

Related Stories: