கொரோனா வைரஸ் பரவல் குறித்து ஜனவரி 11ம் தேதியே மத்திய அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு : ஆர்.டி.ஐ மூலம் அம்பலம்

டெல்லி : சீனாவில் கொரோனா பரவுவது குறித்து ஜனவரி 11ம் தேதியே உலக சுகாதார அமைப்பு இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது. 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி 30 அன்று முதன்முதலாக கேரளாவில் கண்டறியப்பட்டது. இதுவரை 78 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பாதிப்பை ஏற்படுத்தி 1,17,956 உயிர்களை பலிவாங்கியிருக்கும் இந்த நோய் பரவாமல் தடு்க்க மத்திய அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக நிலவிவருகிறது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு கொரோனா குறித்த எச்சரிக்கையை உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது தொடர்பான விவரம் தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு தேசிய நோய்க்கட்டுப்பாட்டு மையம் பதிலளித்துள்ளது.அதாவது 2019ம் ஆண்டு டிசம்பர் 12-29ம் தேதி சமயத்தில் கொரோனா வைரஸ் சீனாவின் வூஹானில் வெகு தீவிரமாக பரவி வந்தது. அதன் பிறகு உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய மண்டல இயக்குநரான பூனம் கேத்ரபால் சிங் என்பவர் இந்தியாவின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு ஜனவரி 11ம் தேதியே கொரோனா குறித்து மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையை போர்க்கால அடிப்படையில் மத்திய பா.ஜ.க அரசு செயல்படுத்தி இருந்தால் லட்சக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களை காவு கொடுக்கும் அளவுக்கு நிலை ஏற்பட்டிருக்காது என பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: