டெல்லி : இந்தியா முழுவதும் உள்ள ராணுவ கேன்டீன்களில் வெளிநாட்டு பொருட்கள் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பயன்பெறும் வகையில், நாடு முழுவதும் 4,000 ராணுவ கேன்டீன்கள் செயல்பட்டு வருகின்றனர். இவற்றின் மின்னணு சாதனங்கள், மளிகை பொருட்களுடன் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மது பானங்களும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.