அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான மருத்துவ கவுன்சலிங் தேதி அறிவிப்பு

புதுடெல்லி: மருத்துவ கவுன்சலிங் நடத்தும் குழுவின் சார்பில் மருத்துவ கவுன்சலிங் நடத்தும் தேதி குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டது. இந்த கவுன்சலிங்கில் நாடு முழுவதும் உள்ள மத்திய, நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு கவுன்சலிங் நடக்கும்.

முதல்சுற்று  கவுன்சலிங்

* பதிவு செய்தல், கட்டணம் செலுத்துவது, விருப்பங்களை பூர்த்தி செய்வது ஆகியவை அக்டோபர் 27ம் தேதி முதல் நவம்பர் 2ம் தேதி வரை.

* இடஒதுக்கீடு செய்யும் பணிகள் நவம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் நடக்கும். இட ஒதுக்கீடு பெற்றவர்கள் பட்டியல் நவம்பர் 5ம் தேதி வெளியிடப்படும்.

* கல்லூரிகளில் 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை தகவல் தெரிவிக்க வேண்டும்.

இரண்டாம் சுற்று  கவுன்சலிங்

* பதிவு செய்தல், கட்டணம் செலுத்துதல், விருப்ப தேர்வு பூர்த்தி செய்தல் நவம்பர் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை.

* விருப்ப கல்லூரிகளை பூர்த்தி செய்து அந்த இடங்களை உறுதி செய்யும் பணி நவம்பர் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை.

* இடஒதுக்கீடு செய்தல் நவம்பர் 23, 24ம் தேதிகளில் நடக்கும்.

* இட ஒதுக்கீடு பெற்றவர்கள் பட்டியல் நவம்பர் 25ம் தேதி வெளியிடப்படும்.

* இடஒதுக்கீடு பெற்றவர்கள் நவம்பர் 26ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை அந்தந்த கல்லூரிகளில் தெரிவிக்க வேண்டும்.

இறுதிச் சுற்று கவுன்சலிங்

* பதிவு செய்தல், கட்டணம் செலுத்துதல், விருப்ப இடங்களை தேர்வு செய்யும் பணிகள் டிசம்பர் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை.

* விருப்ப இடங்களை தேர்வு செய்தல், அதை உறுதி செய்யும் பணி டிசம்பர் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை.

* இடஒதுக்கீடு பணிகள் டிசம்பர் 15ம் தேதி மற்றும் 16ம் தேதி.

* இட ஒதுக்கீடு பெற்றவர்கள் பட்டியல் டிசம்பர் 17ம் தேதி வெளியிடப்படும்.

* இட ஒதுக்கீடு ஆணைகள் பெற்ற மாணவர்கள் டிசம்பர் 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை அந்தந்த கல்லூரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், மத்திய பல்கலைக் கழகங்கள், இஎஸ்ஐசி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு ஆணைகள் பெற்ற மாணவர்கள் அந்த கல்லூரிகளில் சென்று சேரவில்லை என்றாலும், மாற்று இடம் பெற்றும் தெரிவிக்காதவர்களால் ஏற்படும் காலியிடங்கள் டிசம்பர் 28ம் தேதிமுதல் 31ம் தேதி வரை நிரப்பப்படும்.

Related Stories: