பாம்பனில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்-வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை

ராமேஸ்வரம் : வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.வங்கக்கடலில் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அடிக்கடி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாவதும், சில நேரங்களில் அது புயலாக மாறுவதும் இயற்கையாக நடந்து வருகிறது.

வங்கக்கடலில் நேற்று புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியதால், பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.

வங்கக்கடல் பகுதியில் ஒடிசா மாநிலத்திலுள்ள பாரதீப் துறைமுகத்தில் இருந்து தென்கிழக்கே 180 கி.மீ தூரத்திலும், மேற்குவங்கம் சாகர் தீவு பகுதியில் இருந்து தென்மேற்கே 350 கி.மீ தூரத்திலும், வங்கதேசம் ஹெப்புபரா துறைமுகத்தில் இருந்து தெற்கு மற்றும் தென்மேற்கில் 490 கி.மீ தூரத்திலும் நடுக்கடலில் வடமேற்கு மற்றும் மேற்கு மையப்பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

இதனால் வங்கக்கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. மேலும், பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று பகல் 1.40 மணியளவில் எண். 1 புயல் கூண்டு ஏற்றப்பட்டது. கடலுக்கு செல்லும் மீனவர்கள் பாதுகாப்புடன் இருக்க எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: