பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி

சசராம்: பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை பிரதமர் மோடி சசராமில் தொடங்கினார். தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசி வருகிறார். பீகார் மாநிலத்தில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். வதந்திகள் மூலம் மக்களை சிலர் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர் என பிரதமர் பேசினார்.

பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

பா.ஜ.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், பீகார் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும். பீகாரின் நகர் மற்றும் கிராமங்களில் 2022-ம் ஆண்டுக்குள் 30 லட்சம் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். பீகாரில் மருத்துவம், பொறியியல் படிப்புகள் இந்தி மொழியில் கற்பிக்கப்படும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரத்தைத் தொடங்கினார்.

Related Stories: