கொசஸ்தலை ஆற்றில் பெண் சடலம்

திருத்தணி: திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் அருகே உள்ளது சீதாபுரம் காலனி. இங்கு வசிப்பவர் சேகர். இவருடைய மகள் வசந்தி (35) சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர்.  இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலையில்  வீட்டிலிருந்து வெளியே சென்ற வசந்தியை காணவில்லை.   அக்கம் பக்கம் தேடியும் கிடைக்காததால் நேற்றுமுன்தினம் மாலை சீதாபுரம் அருகே செல்லும் கொசஸ்தலை ஆற்றில் பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் சடலமாக மிதந்துள்ளார். கனகம்மாசத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>